மூன்று மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு ஏமாற்றம்

மூன்று மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு ஏமாற்றம்

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி 19 மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. இவற்றில் ஒன்பது மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தால் 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கலாம் என பாஜக கனவு கண்டது. ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. மூன்று மாநிலங்களின் முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

நாகாலாந்து(59/60)

பாஜக- 24
என்பிஎஃப்-32
காங்கிரஸ்- 0
மற்றவை-3

திரிபுரா(59/59)

மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28
மற்றவை- 1

மேகாலயா(56/59)

காங்கிரஸ்-21
பாஜக- 0
என்பிபி- 15
மற்றவை- 20

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், நாகலாந்து மாநிலத்தில் என்பிஎஃப் கட்சியும் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திரிபுராவில் மட்டும் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இழுபறியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply