மூன்று மாநில முதல்வர்களை கவர்ந்த ராகவா லாரன்ஸ்:

பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவிலேயே மிகவும் சிறப்பாக நிதி உதவியும் சேவை உதவியும் செய்து வருபவர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி உள்பட பல கோடிகள் கொடுத்துள்ள ராகவா லாரன்ஸ் முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு உதவிகளை பெற்று அவர்களது குட்புக்கில் இடம்பெற்றுள்ளார்

அதேபோல் சமீபத்தில் தன பத்திரிகையாளர் ஒருவரின் தாயார் கேரள மாநிலத்தில் காலமானபோது கேரள முதல்வருக்கு கடிதம் எழுதி அந்த பத்திரிகையாளரின் தாயாரின் உடலை தமிழகத்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தர்

தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு தமிழ் குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்பட்டு கொண்டிருந்ததாக வெளிவந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவு செய்து குஜராத் மாநில முதல்வரிடம் அந்த குடும்பத்தை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்தார்

தற்போது குஜராத் முதல்வரும் அந்த மாவட்ட கலெக்டரும் அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ததோடு தமிழகத்திற்கு அவர்களை அனுப்ப ஏற்பாடு செய்ய உறுதி அளித்துள்ளன

எனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத் ஆகிய 3 மாநில முதல்வர்களையும் ராகவா லாரன்ஸ் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.