ஊரடங்கால் பரிதவிக்கும் தாய்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி வருமானம் இன்றி பெரும் சிக்கலில் உள்ளனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசிபட்டினத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளும், கை,கால்கள் முற்றிலும் செயல்படாமல் படுக்கையில் உள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற முடியாமல் அவர்களுடைய பெற்றோர் திணறி வருகின்றனர்.

இந்த குடும்பத்தின் தலைவர் தனது வீட்டின் முன்பு சிறிய கடை வைத்து, பால் வியாபாரம் செய்து, தனது மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனித்து வந்தார். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக இந்த குடும்பத்தினர் வருமானம் இன்றி வறுமையில் உள்ளனர். இந்த குடும்பத்திற்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply