shadow

ஆயிரக்கணக்கான செல்போன் தீயில் இட்டு எரிப்பு! ஏன் தெரியுமா?

வங்க தேச தலைநகர் டாக்காவில் 123 வருடங்கள் பழமையான கல்வி நிறுவனம் ஒன்று அதிக கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளில் ஒன்று மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது,

இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்தின் விடுதியில் நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செல்போன்களை மாணவர்கள் கண்முன்னே கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் தீயிலிட்டு எரித்தனர்

இதுகுறித்து அந்த கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘தொழில் நுட்பத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை ஆனால் செல்போன்களால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் எதிர்மறைவாக வருகிறது. குறிப்பாக செல்போனில் இசை, வீடியோக்கள் பார்ப்பதால் அவர்களது திறன் குறைந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளனர்

Leave a Reply