நிலநடுக்கம் நேரத்தில் சிறைக்கைதிகள் செய்த காரியம் என்ன தெரியுமா?

நிலநடுக்கம் நேரத்தில் சிறைக்கைதிகள் செய்த காரியம் என்ன தெரியுமா?

இந்தோனேஷியா நாட்டில் சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டபோது அங்குள்ள சிறை ஒன்று இடிந்து விழுந்ததால் அந்த சிறையில் இருந்த சுமார் 1200 கைதிகள் தப்பியோடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ‘சுலாவேசியில் உள்ள பலு மற்றும் டோங்கலா ஆகிய இடங்களில் இருக்கும் சிறைகள் நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

சுமார் 1200 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பி காணாமல் போயிருக்கிறார்கள் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது டோங்கலாவில் நில நடுக்கத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டதால் அங்கிருந்த அனைத்து கைதிகளையும் காணவில்லை. பெருபாலானவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள். 5 பேர் நில நடுக்கம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பு பயங்கரவாதக் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply