shadow

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரு ஆண்டு வருமானம் ரூ.1005 கோடி?

இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சட்டபூர்வமான அவசியம் இல்லையென்றாலும் தார்மீக அடிப்படையில் தங்களது வருமான வரி கணக்கு வெளியிட்டு வந்தது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பும், பின்பும் தனது வருமான வரிக்கணக்கு விபரங்களை வெளியிட அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வருமான வரிக்கணக்கை விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று அமெரிக்கா முழுவதும் 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர்.

இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே டிரம்பின் ஆலோசகர், வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வேண்டாம் என டிரம்பிடம் தான் ஒருபோதும் கூறவில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிரம்ப்பின் 2015ஆம் ஆண்டின் வருமானம் சுமார் ரூ.1,005 கோடி என்றும் அவர் சுமார் ரூ.254 கோடி வருமான வரி செலுத்தியதாகவும் எம்.எஸ்.என்.பி.சி.’ என்ற டி.வி. சானல் தகவல் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply