தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே வரக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும் இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள் வணிக வளாகங்கள் சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்

இதேபோல் இன்னும் ஒருசில நாட்களில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர்கள் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.