தோல்வி தரும் சோகத்தினை
தோளில் சுமந்து நிற்கையில்,
வேட்கையுடன் வெற்றிக்கனி பறிக்க
விடாமுயற்சியுடன் வா நண்பா
தோற்கப் பழகுவோம்..!!
நாக்கே எதிரி
எப்போதும் எவருக்கும்
பிரதான எதிரி
நாக்கு தான்
புதியதை நுகர்ந்து
நுகர்ந்து நோயாளி ஆகிறான்
பேசக்கூடாத வார்த்தைகளால்
எதிரியாகிறான் ….!!!

Leave a Reply