விஜய்சேதுபதியிடம் தோல்வி அடைந்த தனுஷ்

விஜய்சேதுபதியிடம் தோல்வி அடைந்த தனுஷ்

2தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடிதான்’ படம் தான் விஜய்சேதுபதிக்கு கிடைத்த மிகப்பெரிய பிரேக். இந்த படத்திற்கு பின்னர் அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் தனுஷின் ‘தொடரி’யும், விஜய்சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படமும் ரிலீஸ் ஆனது.

முதல் நாள் தனுஷின் தொடரி’ வசூல் நன்றாக இருந்தாலும், அடுத்தடுத்து வந்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 2வது நாளில் இருந்து வசூல் குறைய தொடங்கியது. ஆனால் முதல் நாளில் சுமாரான வசூலையே கொடுத்த ‘ஆண்டவன் கட்டளை’ பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல பிக்கப் ஆகி வெற்றி பெற்றுள்ளது.

முதல்முறையாக தனுஷ்-விஜய்சேதுபதி படங்கள் மோதிய நிலையில் விஜய்சேதுபதியிடம் தனுஷ் தோல்வி அடைந்ததாகவே கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் தனுஷின் தொடரி’ 23 தியேட்டர்களில் 4 நாட்களில் ரூ.1,58,36,140 வசூல் செய்துள்ள நிலையில் விஜய்சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ வெறும் 15 திரையரங்குகளில் ரூ.73,08,550 வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

Leave a Reply