நடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்

நடிகைகள் சமந்தா-எமிஜாக்சன் ஆக்கிரமித்து கொண்ட வாரம்

samanthaகோலிவுட் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று முன்னணியில் இருந்தாலும் அவரை அடுத்து சமந்தா மற்றும் எமிஜாக்சன் உள்ளனர். இந்த இரு நடிகைகளுக்கும் இந்த வாரம் தங்கள் திரையுலக வாழ்க்கையில் முக்கியத்துவமான வாரமாக அமைந்துள்ளது.

சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இரண்டு நடிகைகளும் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டிரைலர், இசைவெளியீடு என இந்த வாரத்தில் வெளியாகவுள்ளதால் இருவருக்குமே முக்கியத்துவமான வாரமாக கருதப்படுகிறது.

சமந்தா நடித்த ’24’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில், ‘விஜய் 59’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவும், ‘தங்கமகன்’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

அதேபோல் எமிஜாக்சன் நடித்த ‘விஜய் 59’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவும், ‘தங்கமகன்’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும், அதே 27ஆம் தேதி ‘கெத்து’ படத்தின் டிரைலரும் வெளியாகவுள்ளது.

இவற்றில் ‘விஜய் 59’ மற்றும் ‘தங்கமகன்’ படங்களில் இருவருமே நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply