shadow

ஆண்ட்ராய்டு, மிஸ்ட் கால், ஜியோனி! இதெல்லாம் என்ன தெரியுமா? ராஜஸ்தான் குழந்தைகள் பெயர்

முன்பெல்லாம் ராசி, நட்சத்திரம் பார்த்து குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள். சிலர் தங்கள் குலதெய்வத்தின் பெயரை வைப்பார்கள். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டைலான சுருக்கமான பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மொபைல் உலகில் பிறக்கும் குழந்தைகளுக்கு மொபைல் சம்பந்தப்பட்ட பெயர்கள் வைப்பது பேஷனாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ராம்நகர் என்ற கிராமத்தில் வசித்து வரும் காஞ்சர் இன மக்கள் தங்கள் கிராமம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ராஷ்ட்ரபதி, பிரதான் மந்திரி, சாம்சங், ஆண்ட்ராய்டு, சிம் கார்டு, சிப், ஜியோனி, மிஸ்டு கால், ராஜ்யபால், ஹை கோர்ட் உள்ளிட்ட பெயர்களை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த மாவட்டத்தின் கலெக்டர், எஸ்பி ஆகியோர்களின் பெயர்களையும் குழந்தைகளுக்கு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தினர் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த கிராமம் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி வருகிறது.

Leave a Reply