shadow

images (1)

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழி தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தேரழகென்பது புகழ் பெற்றது. மிகப்பெரிய அழகியத்தேரும்,கோயிலும் குளமும் கொண்டத் திருத்தலமாக விளங்கும் தியாகராஜர் கோயிலுக்குரிய தலையாய சிறப்புகளுள் ஒன்று ஆழித்தேர் விழா. வீதிவிடங்கனாம் தியாகராஜர் திருவீதிகளில் தேர்மேல் எழுந்தரு ளும் திருவிழாவே அப்பெருவிழாவாகும்.

உலக பிரசித்திப் பெற்ற பிரமாண்டமான ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இ யற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் புரா ண சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபு ராண காட்சிகள் மரத்தில் புடைப்பு சிற்பங்களாக தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது தேரின் பேரழகு.

திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித்தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோ் பீடத் தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோ் கம்பீரமா க அசைந்து வருவதை பார்க்க நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் வருவார்கள்.

கடந்த 16.7.2010ம் ஆண்டு நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடி வெடுக்கப்பட்டு 2.8.2010அன்று தேர் பிரிக்கும் பணி தொடங்கி கடந்த சில தினங்களுக்கு மு ன்பு நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை திங்கள்கிழ மை ஆழித்தேர் மற்றும் சுப்பிரமணியர் தேர்வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.

விழாவையொட்டி தியாகராஜர் கோயிலின் பரிவார தெய்வங்களான தேரடி விநாயகர், விக் னேஷ்வரர், கமலாலயக்குளத்தின் நடுவிலுள்ள நாகநாதர்சுவாமி, அய்யனார்கோயில், பிடா ரிகோயில்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, மகாகணபதி ஹோமம், வாஸ்துசாந்தி,பிரவே சபலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், மாலை 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு 2-ம் காலயாகம், காலை 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாரா தனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட் டதையடுத்து காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கிய சிறி து நேரத்தில் காலை 9.30 மணியளவில் ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தேரோ ட்டத்தை தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வடம் பிடித்து தொடக்கி வைத்தார்.

பக்தர்கள் தேரிலுள்ள வலையங்களில் கட்டப்பட்டிருந்த 3 வடம் கயிற்றை பிடித்து இழுத்தன ர். பக்தர்களுக்கு உதவியாக தேருக்கு பின்னால் பொக் ளைன் இயந்திரம் ஆழித்தேரை தள் ளியது. தேரை இழுக்கும் போது பக்தர்கள் ஆருரா தியாகேசா என்று பக்தி கோஷம் எழுப்பி னர். பிரமாண்ட தோற்றத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்தாடும் காட்சி பிரமிக்க வைத்தது. தேருக்கு முன்னாள் சிவபக்தர்கள் தேவாரப் பாடல்கள் பாடிச் சென்றனர். இசை வாத்தியங் கள் முழங்க ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

Leave a Reply