திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ருத்ர யாகம்!

LRG_20150825115840869549

திருப்பணி தடை நீங்கி, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நேற்று நடந்தது.திருப்பூர் விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.

திருப்பணி தடையில்லாமல் நடக்கவும், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவும் நேற்று, மகா ருத்ர யாகம் நடத்தப்பட்டது; மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜாபட்டர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். கலச பூஜை, 108 ஹோம பொருட்களை கொண்டு, யாக வேள்வி, நிறைவேள்வி நடந்தது. தொடர்ந்து, கலசத்தில் இருந்த புனித நீரால், மூலவர், அம்பாள் மற்றும் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பணி கமிட்டியினர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.