ஒரு மணி நேரத்தில் 8.40 லட்சம் தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே மணி நேரத்தில் 8.40 லட்சம் தரிசன டிக்கெட் விற்பனையானதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

விரைவில் கோடை விடுமுறை வரவிருப்பதால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங் களுக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பொதுமக்கள் விரைவாக வாங்கி குவித்துள்ளனர்.

மேலும் ஏராளமானோர் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் எடுக்க முன்வந்ததாகவும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது