shadow

maxresdefault

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சாற்றுவிக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லபட்டது.

புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் 5ம் திருநாளன்று, திருமலை திருப்பதி வெங்கடேசப்பெருமாளுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் சாற்றபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு,  பிற்பகல் 12 மணிக்குமேல்,  ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி ஆகியவை சாற்றபட்டது.  சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளை  பத்ரிநாராயணபட்டர் செய்தார். பின்னர் ஸ்தானிகம் கிருஷ்ணன் அய்யங்கார் தலைமையில் மாட வீதி சுற்றி வந்து, திருப்பதிக்கு கொண்டு செல்லபட்டது.  இந்நிகழ்ச்சியில் மணவாளமாமுனிகள் ஜீயர் சுவாமிகள்,  தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, ஆனந்தராமகிருஷ்ணன் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கோயில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நாச்சியார்  சாரிட்டி டிரஸ்ட் தலைவரான, ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply