திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது

c7952bf2-df0a-4d59-80f9-425897c6df6f_S_secvpf

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.

திருப்பதியில் நேற்று காலை சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது.

திருமலையில் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியது.

ஏழுமலையான் கோவில் 2–வது பிரகாரத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.

திருமலை 2–வது மலை பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 7–வது கிலோ மீட்டரில் இருந்து 14–வது கிலோ மீட்டர் வரை பல இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தது.

இதனால் போக்குவரத்து தடைபட்டது. மழை காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இலகுவாக அவர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.

Leave a Reply