shadow

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாஜக பிரமுகர்

28முன்னாள் பாஜக பிரமுகரும், வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவருமான திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்து 4 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை தலைவர் பதவிக்கு சரியான நபரை தேர்வு செய்யாத நிலையில் தற்போது திருநாவுக்கரசரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

1980-87 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராகவும், பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராகவும் பணிபுரிந்தவர் திருநாவுக்கரசர். அதுமட்டுமின்றி வழக்கறிஞர், பத்திரிகையாளர், விவசாயி, சமூகசேவகர் என பன்முகத் தன்மை கொண்டவர் திருநாவுக்கரசர்.

Leave a Reply