அண்ணா அறிவாலத்தில் ஸ்டாலின் – திருமாவளவன் திடீர் சந்திப்பு

அண்ணா அறிவாலத்தில் ஸ்டாலின் – திருமாவளவன் திடீர் சந்திப்பு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என சமீபத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் தேர்தல் கூட்டணி குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இரு தலைவர்களும் பேசவில்லை என்றும் இருதரப்பினர்களும் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திப்பில் நிச்சயம் எதிர்கால அரசியல் திட்டங்கள், கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, விசிக கட்சிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply