shadow

ராகுல்காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு: 3வது அணிக்கு முட்டுக்கட்டையா?

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3வது அணியை ஒருபக்கம் மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் முயற்சித்து வரும் நிலையில் 3வது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

நேற்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த பின்னர் திருமாவளவன் கூறியதாவது: 2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். வன்கொடுமை தடுப்புசட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தீர்மானம் நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பா.ஜனதா அல்லாத அனைத்து மதசார்பற்ற கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை பா.ஜனதா, காங்கிரஸ் என இரண்டின் மீதும் வெறுப்பு உண்டு. தமிழகத்தில் பா.ஜனதாவை தனிமைப்படுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகள் இணைந்து நிற்கின்றன.

அதே நிலை தேசிய அளவிலும் இருந்தால் பா.ஜனதாவை தனிமைப்படுத்த முடியும். ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் முடியும். எனவே, காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடதுசாரிகள் போன்ற எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டியது வரலாற்று தேவையாக உள்ளது. தேர்தல் நெருங்கும்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

தமிழக அரசு ஆட்சியை தக்க வைப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதன்காரணமாக மக்களிடம் இருந்து அ.தி.மு.க. நாளுக்குநாள் அன்னியப்பட்டு வருகிறது என்பதை முதல்-அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Leave a Reply