10 மணி நேரம் தொடர்மழை: திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்!

திருச்செந்தூரில் 10 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தண்ணீர் புகுந்தது

திருச்செந்தூரில் கடந்த 10 மணி நேரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்த்து. இதன் காரணமாக அங்கு உள்ள முருகன் கோவிலுக்கு தண்ணீர் புகுந்து விட்டது.

திருச்செந்தூரில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து பெய்ததாகவும், இதுவரை 22 சென்டிமீட்டர் மழை பெய்து இருந்ததாகவும் தெரிகிறது

தூத்துக்குடியிலும் இதேபோன்று 14 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.