18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்றாவது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை விசாரணை செய்து சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து இறுதித்தீர்ப்பை வழங்குவார்.

மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நீதிபதி எஸ்.விமலா அவர்கள் உயர் நீதிமன்றத்தில், மூத்த நீதிபதியாக உள்ளார். கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்; மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். பல மாவட்டங்களில், பணியாற்றி உள்ளார். உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.