shadow

கருணாஸ் எங்க ஜாதியே இல்லை. தேவர் பேரவை போராட்டம்.

karunasஅதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அதில் திருவாடனை தொகுதி வேட்பாளராக கருணாஸ் அறிவிக்கப்பட்டதும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஜாதி பெயரில் ஒரு அமைப்பை வைத்துள்ள கருணாஸ், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முந்தைய நாள்தான் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். மறுநாள் அவருக்கு சீட் கிடைத்தது. அவருடைய அதிர்ஷ்டத்தை எண்ணி ஒரு பிரிவினர் ஆச்சரியம் அடைந்தாலும்,இன்னொரு பிரிவினர் அவர் எங்க ஜாதியே இல்லை, அவர் வேற ஜாதி, எனவே வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தேவர் பேரவையினர் கூறும்போது: “கருணாஸ் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கால் அல்லது அதிமுக விசுவாசியாக, தன் பணபலத்தால் சீட் வாங்கியிருந்தால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் சீட் பெற்றிருப்பது தனது சமூகத்தை அடையாளப்படுத்தி. அதில் பெரிய மோசடி செய்திருக்கிறார். அவர் தன் உண்மையான சாதியை மறைத்து, தமிழகத்தில் கணிசமாக வாழும் தேவர் சாதியின் பிரதிநிதியாக சீட் பெற்றுள்ளார். உண்மையில் எங்கள் சமூகத்துக்கும் அவருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. இது பெரிய மோசடி என்று கூறினார்.

இதுகுறித்து கருணாஸ் கூறிய விளக்கம் பின்வருமாறு: நாலு வருஷத்துக்கு முன்னாடி இதேமாதிரி ஒரு கும்பல் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது. என்னடா இது வம்பாருக்குன்னு, நான் யாரு, என்ன சாதிங்கிறதை ஆதாரத்துடன் அவர்களிடம் காண்பித்தேன். அப்போது தலையாட்டிவிட்டு சென்றவர்கள், இப்போது அதே பிரச்னையை மறுபடியும் கிளப்புகின்றனர்

நான் பிரபலமாக இருப்பதால் இப்படி அவதூறை கிளப்புகிறார்கள். வேறு யாரோ ஒரு சாதாரண ஆட்களாக இருந்தால் இதுபோன்ற விசாரணையில் இறங்குவார்களா….இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லலை. மக்களுக்கு நான் யாரென்று தெரியும். இந்த அவதூறுகளை நான் கண்டுகொள்ளவில்லை.” என்றார்.

இந்த செய்தியை படிக்கலையா? அப்படியே இதையும் படிச்சிரிங்களேன் ப்ளீஸ்

அதிமுகவில் இணைந்த இரண்டு பிரபல நடிகர்கள்

Leave a Reply