shadow

ரூ.11 கோடியை தாண்டிய ‘தெறி’யின் சென்னை வசூல்
theri-3
இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான ‘தெறி’ திரைப்படம் 30 நாட்களை கடந்தும் இன்னும் சென்னையில் 10 திரையரங்குகலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. கடந்த வாரம் மட்டுமே இந்த படம் 11 திரையரங்குகளில் சுமார் 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும் இந்த படம் ரிலீஸ் ஆன ஏப்ரல் 14 முதல் மே 15ஆம் தேதி வரை இதுவரை சென்னையில் மட்டும் ரூ.11,13,84,755 வசூல் செய்துள்ளது. விஜய் படங்களில் மட்டுமின்றி கோலிவுட் திரையுலக வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதுமே ரூ.கோடி வசூல் செய்ய முடியாமல் பல படங்கள் திணறி வரும் நிலையில் ‘தெறி’ திரைப்படம் சென்னையில் மட்டும் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்தது விநியோகிஸ்தர்களை மலைக்க வைத்துள்ளது.

Leave a Reply