‘தெறி’ படம் பார்க்க தியேட்டருக்கு போக வேண்டாம். பஸ்ல போனா போதும்

‘தெறி’ படம் பார்க்க தியேட்டருக்கு போக வேண்டாம். பஸ்ல போனா போதும்
theri-3
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி மாபெரும் வசூலை பெற்று தற்போது தமிழகம் முழுவதும் ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மற்ற அனைத்து படங்களையும் பாதிக்கும் திருட்டு டிவிடி இந்த படத்தை கொஞ்சம் அதிகமாகவே பாதித்துள்ளதாகவும், தனி நபர்கள் வீடுகளுக்கு இந்த படத்தின் டிவிடியை வாங்கிப்போய் பார்ப்பது மட்டுமின்றி பொது இடமான பேருந்துகளிலும் ‘தெறி’ படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு பேருந்தில் ‘தெறி’ திரைப்படம் திரையிட்டதை அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகர் அறிந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பேருந்து உரிமையாளருக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், ஓட்டுனர் தானேதான் ‘தெறி’ படத்தை  போட்டதாகவும் வாக்குமூலம் அளித்தூள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply