shadow

அதிமுக வெற்றி எதிரொலி. ஜெயா டிவிக்கு போகும் ‘தெறி’-கபாலி’

kabali theriகோலிவுட் திரையுலகின் ஒருசில தயாரிப்பாளர்கள் தேர்தல் முடிவை உன்னிப்பாக கவனித்து வந்தனர். தங்களுடைய பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமையை யாருக்கு விற்பனை செய்வது என்பதை தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்ததை அடுத்து தற்போது முதல் ஆளாக கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரித்த ‘தெறி’ மற்றும் ‘கபாலி’யை ஜெயாடிவிக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிற்டஹு.

மேலும் சூர்யாவின் 24 மற்றும் விக்ரமின் இரு முகன் படங்களையும் ஜெயா டிவி விலை பேசி வருவதாக கூறப்படுகிறது. ஜெயா டிவிக்கு இந்த படங்கள் கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

அதேபோல் இன்னும் ஐந்து வருடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ‘தமிழ்’ என்ற பெயரில் படம் தயாரித்தால்கூட வரிவிலக்கு கிடைக்காது என்றும் சமூக வலைத்தளங்களில் வேடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசியலின் முடிவுகள் கோலிவுட்டையும் பாதிக்கின்றது என்பது உண்மையாகிறது.

Leave a Reply