shadow

Nepal_Kathmandu_Pashupatinath_Guru

முதல் வகை தீட்சை

நமது ரோமத் துவாரங்கள் வழியாக கெட்ட நீர்களை வெளியேற்றுவது

இரண்டாவது தீட்சை

மூன்று தோஷங்கள் என்ற வாத-பித்த – சிலேதுமங்கள் நீங்குவது

மூன்றாவது தீட்சை

நமது மேல் தோலை பாம்பு சட்டை உரிப்பதுபோல் ஒவ்வரு சட்டையாக உரித்துக் கொண்டுவர வேண்டும்

நான்காவது தீட்சை

நமது தோலின் செல்கள் செத்து மடிவதை நிறுத்தி ஒவ்வரு செல்களும் அதனதன் தனித் தனி உயிர்களுடன் வாழ வேண்டும்

ஐந்தாவது தீட்சை

முக்கிய தீட்சை ஆகும் சட்டை களைந்து அல்லது கழன்று தேகம் நல்ல சிகப்பு நிறமாக மாறும் பஞ்சபூத தத்துவம் விளங்கும் . அப்போது பஞ்ச மூர்த்திகளும் தேவலோகத்தவரும் வசமாவர்

இப்படியே சென்று பத்தாவது தீட்சையில்
தேக சித்தி கிடைக்கும் திருமேனி அடையலாம்

புற விஷயங்களை.. தன் எண்ணங்கள் வழி தான் ஆசையோடு இன்றெடுத்த தாய் போல மனம்…

அதை அறிந்தும், அறியாதது போல நான் மடையன் என ஒப்புக்கொள்வது போன்ற அறிவு…

இரண்டும் கொண்ட தன் சுயத்தால், தேர் இழத்து தெருவில் விட்டது போல இருக்கும் இவ்வுடல்…

இவ்வாறு இருக்கும் இவ்வெளிபுற நோக்கிலிருந்து அகம் எனும் உள் ஒளி தந்து, என் வீடுபேறு அடைய அருள் புரிவாய் ஆண்டவனே….

கடவுளை நாம் காண முடியாது, அதனுடன் கலந்து விட மட்டுமே முடியும். நதிகள் கடலில் கலப்பதை போல…

ஏனென்றால் அதை காணும் அளவிற்கு பொருமை கிடையாது. பசித்த பிள்ளை தன் தாயை கண்டதும் சென்று அவளை அடைவது போலவும், காந்ததின் அருகே சென்ற ஆணி போலவும், பரமாத்மாவை கண்டதும் ஆத்மா அதனுடன் கலந்து விடுமே தவிர.. கண்டு நின்று கொண்டிருக்க முடியாது

Leave a Reply