உலகின் மிகப்பெரிய வைரக்கல்: 228 கோடி ரூபாய்க்கு ஏலம்?

உலகின் மிகப்பெரிய வைரக்கல் முதன்முறையாக துபாயில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட நிலையில் இந்த வைரம் 228 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘THE ROCK’ என அழைக்கப்படும் இந்த வைரக்கல், 20 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.

கிறிஸ்டி நிறுவனம் முதன்முறையாக இந்த வைரக்கல்லை ஏலத்தில் விடுகிறது.

இந்த வைரக்கல் ஜெனிவா நகரில் வரும் மே மாதம் ஏலம் விடப்படுகிறது. வைரம் சுமார் 228 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என்று கிறிஸ்டி நிறுவனம் கணித்துள்ளது.