shadow

terroristsஉலக அளவில் தீவிரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் உள்ள நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை இங்கிலாந்து நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகரம் சென்னை உள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வெரிஸ்க் மேப்பிள் கிராப்ட் என்ற தனியார் நிறுவனம் உலக அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் ஒன்றை கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வுப்பட்டியலின் முடிவு நேற்று வெளியானது.

உலகில் அதிகபட்சமாக தீவிரவாதிகளால் தாக்கப்படும் முக்கிய நகரங்களாக  64 நகரங்களை இந்த நிறுவனம் பட்டியிலிட்டுள்ளது. இதில்  இராக்கின் பாக்தாத், மொசூல், அல் ரமாடி, பாகுபாத், கிர்குக், அல் ஹில்லா ஆகிய நகரங்கள் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் பெஷாவர் 7-வது இடத்தையும், லிபியாவின் பெங்காஸி 8-வது இடத்தையும் குவெட்டா 9வது இடத்தையும், ஹாஸு கேல் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இந்திய நகரங்களான இம்பால் 32வது இடத்திலும், ஸ்ரீநகர் 49வது இடத்திலும், சென்னை 178வது இடத்திலும், உள்ளது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு 204வது இடத்திலும், புணே 206வது இடத்திலும், ஹைதராபாத் 207வது இடத்திலும், நாக்புரி 210வது இடத்திலும், கொல்கத்தா 212வது இடத்திலும், மும்பை 298வது இடத்திலும், டெல்லி 447வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply