மிக விரைவில் உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்!! ஐநா

உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மிகவிரைவில் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது .

பருவநிலை மாற்றம், கொரோனா இவைகளால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

சில தினங்களில் உணவுத் தட்டுப்பாட்டால் மேலும் பல நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும். ஓரிரு ஆண்டுகளில் இந்த உணவு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக் கூடும்.

2023ம் ஆண்டில் உணவு பஞ்சம் தீவிரமடையும் எனவும், சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.