shadow

jurassic parkகடந்த சிலவருடங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட ஹாலிவுட் திரைப்படம் ’ஜூராஸிக் பார்க்’. இப்பொழுது கூட தொலைக்காட்சியில் ஜூராசிக் படம் போட்டால் சலிக்காமல் பலர் பார்ப்பதற்கு காரணம் அந்த படத்தில் இடம்பெறும் அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளும், துல்லியமான சவுண்ட் எபெக்ட்டும்தான். ஆனால் இந்த படத்தின் தொழில் நுட்பம் குறித்து சமீபத்தில் வெளியான தகவல் ’ஜூராஸிக் பார்க்’ ரசிகர்களை ரொம்பவே வெட்கப்பட வைத்துள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ‘ஜூராஸிக் பார்க்’ படத்தில் சமையலறைக்குள் 2 குட்டி டைனோசர்கள் நுழைந்து உருமும் காட்சியும், அந்த சத்தத்தைக் கேட்டு ஒரு குட்டிப் பையனும் அவனது அக்காவும் சத்தம் போடாமல் மரண பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருக்கும் காட்சியையும் யாரும் மறந்திருக்க முடியாது.

சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜூராசிக் பார்க் படத்தின் ஒலி வடிவமைப்பளரான கேரி ரிட்ஸ்டார்ம், சமையலறைக் காட்சியின் போது ஒரு குட்டி டைனோசரின் குரலுக்காக 2 ஆமைகள் உடலுறவு கொள்ளும் போது எழுப்பும் சத்தத்தைப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு டைனோசருக்கு கழுதை, பூனை, குதிரை, நாய் என்று பல விலங்குகளின் குரலை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூராஸிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் வெளியாகிறது. இந்த படத்திற்கான டிரைலரிலும் ’குட்டி டைனோசர்’ இருக்கிறது. அதற்கு எந்த மிருகத்தின் உடலுறவு சத்தத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு பின்னரே தெரியவரும்.

Leave a Reply