ஆனியன் இறக்குமதி செய்ய யூனியன் கேபினட் அனுமதி

இந்தியா முழுவதும் ஆனியன் என்கிற வெங்காயம் தட்டுப்பாடாக இருக்கும் காரணத்தால் வெங்காய விலை விண்ணை தொட்டு வருகின்றது

இந்த நிலையில் நேற்று கூடிய யூனியன் கேபினட், உணவுத்துறை அமைச்சகத்திற்கு 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்துள்ளது. இந்த வெங்காயம் இறக்குமதி ஆனவுடன் நாடு முழுவதும் வெங்காய விலை சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த ஆண்டு வெங்காயம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு அமோக லாபம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற லாபத்தை அவர்கள் பார்த்ததில்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply