shadow

அருண்விஜய்-மகிழ்திருமேனி இணையும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகர் அருண்விஜய் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் அவர் நடித்த வில்லன் கேரக்டர் விக்டர் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘தடம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி ஏற்கனவே அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அருண்விஜய் நடிக்கும் ‘தடம்’ படத்தை இயக்குவதில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply