‘அரண்மனை 2’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

‘அரண்மனை 2’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு
aranmanai2
சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 2’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தீவிர முயற்சியில் உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘மகாதேவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘கலாவதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம்பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ராதாரவி மற்றும் முக்கிய வேடத்தில் சுந்தர் சி நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

Chennai Today News: The telugu title of ‘Aranmanai 2’ is announced

Leave a Reply

Your email address will not be published.