சென்னையில் காவல்துறையினர் இன்று காலை ஜில்லா படத்தின் பேனர்களை அகற்ற ரகசிய உத்தரவிட்டதால் விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே தலைவா பட ரிலீஸின்போது பல பிரச்சனைகளை சந்தித்து பின்னர் பலவித போராட்டங்களுக்கு பிறகு படம் வெளிவந்ததை நாம் அறிவோம். ஜில்லா படத்திற்கு அதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு கவனத்துடன் கையாண்டு வந்தனர். எவ்வித பஞ்ச் டயலாக்கும் படத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். படமும் சென்சார் செய்துவிட்டு யூ சர்டிபிகேட் வாங்கிவிட்டது.

வரும் 10ஆம் தேதி ஜில்லா ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்தின் பேனர்களை அவரது ரசிகர்கள் சென்னையின் பல இடங்களிலும் வைக்க ஆரம்பித்தனர். இன்று காலை ரோந்து வந்த போலீஸார் திடீரென வடபழநி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஜில்லா  படத்தின் பேனர்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அகற்ற உத்தரவிட்டனர். ஆனால் அந்த பேனர்களுக்கு அருகே இருந்த மற்ற பட பேனர்களை கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தி காதுக்கு எட்டியவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளார் விஜய். இது தற்செயலாக நடந்ததா? அல்லது மேலிட பிரஷர் காரணமாக நடந்ததா என்று புரியாமல் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply