shadow

‘பைரவா’ படத்தின் ஆறு ரகசியங்கள்.

bairava-1‘அழகிய தமிழ் மகன்’ இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத ஆறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்

1. கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றின் அடிப்படையாக கொண்டுதான் ‘பைரவா’ படத்தின் கதை எழுதப்பட்டதாம்

2. நடிகை பாப்ரிகோஷ் திடீரென இந்த படத்தில் இணைய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் காரணமாம்

3. இந்த படத்தில் பஞ்ச் டயலாக் கிடையாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு வசனமும் பவர்புல்லாக இருக்குமாம்

4. கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என 2 வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்துள்ளார்

5. இந்த படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த பாடலை சந்தோஷ்குமார் தற்போது கம்போஸ் செய்து வருகிறார்.

6. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் நடித்த கோபி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.

Leave a Reply