shadow

விஜய்யின் போலீஸ் கெட்டப் எப்படி இருக்கும்? ரகசியம் காக்கும் படக்குழுவினர்

vijayபுலி’ படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இந்த படத்தில் வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டனர். விஜய்யே கூட ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் போலீஸாக நடித்துள்ளார்.  எனவே இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் தோன்றாத வித்தியாசமான போலீஸ் கெட்டப்பை விஜய்க்கு செலக்ட் செய்துள்ளார் அட்லி.

இந்த கெட்டப் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரை இந்த கெட்டப்பை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ளவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனேகமாக இந்த படத்தில் விஜய் பெரிய மீசையுடன் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் இந்த படத்தில் குணசித்திர கேரக்டரில் நடித்து வருவதாகவும் வில்லனாக நடிக்கும் நடிகரை இன்னும் அட்லி முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். மேலும் மூன்றாவது நாயகியாக ‘காதலில் விழுந்தேன்’ புகழ் சுனைனாவும் நடிக்கவுள்ளார். பிரபு மற்றும் ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அட்லி இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

Leave a Reply