shadow

2.0 படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் அனைத்து மொழிகளின் சாட்டிலைட் உரிமை மட்டுமே ரூ.120 கோடிக்கு வியாபாரமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள முன்னணி சாட்டிலைட் சேனல்களில் ஒன்றான ஜிடிவி ‘2.0 படத்தின் சாட்டிலைட் உரிமைகளை பெற்றுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா உறுதி செய்துள்ளது.

சாட்டிலைட் உரிமை வியாபாரம் என்பது தொடக்கமே என்றும் இன்னும் இந்த படத்தின் வியக்கத்தக்க வியாபாரத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவவரும் என்றும் இந்த படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடிப்பதும் சாத்தியமே என்றும் முன்னணி விநியோகிஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன், அதில் ஹூசைன், சுதான்ஷூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

Leave a Reply