shadow

சசிகலா நியமனம் ரத்து: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் சொல்வது என்ன?

அதிமுக பொதுகுழு இன்று காலை சென்னையில் கூடியுள்ள நிலையில் எதிர்பார்த்தது போலவே சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. இனி பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்கும் வழங்கப்படும் வகையில் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் கட்சி சட்ட விதிகளை மாற்றவோ, திருத்தவோ, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.ஆகிய இருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான அதிகாரமும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்படும் வகையில் கட்சி விதி எண்19ல் திருத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை இயற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும்..

தீர்மானம் 2 – ஜெயலலிதா இருந்த போது அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும்..

தீர்மானம் 3 – எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்..

தீர்மானம் 4 – ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

தீர்மானம் 5 – வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு..

தீர்மானம் 6 – விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி..

தீர்மானம் 7 – எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியை யாராலும் நிரப்ப முடியாது

 

Leave a Reply