தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை!

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப் ப்ரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.4,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.37,280-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.3,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.61,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.