shadow

அஜித்தின் அடுத்த இரண்டு படங்களின் டைட்டில்களும் Vயில் தான் ஆரம்பிக்கின்றதா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வரு,ம் ஏப்ரல் மாதல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலான ‘விசுவாசம்’ என்ற டைட்டிலை கடந்த 2016ஆம் ஆண்டு ‘வேதாளம்’ படப்பிடிப்பின்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதுமட்டுமின்றி இனி அஜித் நடிக்கும் மேலும் இரண்டு படங்களின் டைட்டில்களும் V என்ற எழுத்தில்தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க விஷ்ணுவர்தன், புஷ்கர்-காயத்ரி மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகியோர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் இயக்குனர் என்றாலும் படத்தின் டைட்டில் Vயில் தான் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply