shadow

உலகின் அமைதியான நாடு எது? சர்வே முடிவு வெளியானது

peaceஅமைதியான நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை ஆண்டுதோறும் உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2015-ம் ஆண்டுக்கான அமைதி நாடுகள் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் 163 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டென்மார்க் நாட்டிற்கு இரண்டாவது இடமும், ஆஸ்திரியாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 141-வது இடம் கிடைத்து உள்ளது. கடந்த 2014-ல் 143-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 2 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 153-வது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 160-வது இடமும் கிடைத்து இருக்கிறது. தெற்காசியாவில் சிறந்த இடத்தை (13) பூடான் பிடித்தது.

இந்த பட்டியலில் கடைசி நாடாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியா உள்ளது. அந்த நாடு கடைசி இடத்தை(163) பிடித்தது. சோமாலியா(159), ஈராக்(161), தெற்கு சூடான்(162) ஆகிய நாடுகளும் பின்வரிசையில் உள்ளன.

Leave a Reply