இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது நிமிர்ந்து நில் என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். ஜெயம் ரவி, மேக்னாராஜ், அமலாபால்,சூரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது.

நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 45 வயது நடுத்தர மனிதர் வேடம் ஒன்றும், 25 வயது இளைஞர் வேடத்திலும் நடிக்கிறார். இந்த படத்திற்காக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மிகநீண்ட ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. தமிழ்ப்பட வரலாற்றில் மிக நீண்ட ஆக்ஷன் காட்சி இந்த படத்தில்தான் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜெயம் ரவி கேரக்டரில்” நான் ஈ” புகழ் நானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமுத்திரக்கனி தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். “கீதாரி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஆடுமேய்ப்பவர் பற்றிய கதையாம். இதில் ஆடுமேய்ப்பவராக சமுத்திரக்கனியே நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துவருவதாகவும், “நிமிர்ந்து நில்” படத்தின் வெளியீட்டுக்குப் பின் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் விளம்பரம் வெளிவரும் என்றும் சமுத்திரக்கனி கூறியுள்ளார்

Leave a Reply