தமிழில் வெளிவரும் முதல் ‘ஸ்டார் வார்ஸ்’ படம்

தமிழில் வெளிவரும் முதல் ‘ஸ்டார் வார்ஸ்’ படம்
Untitled-2
மூன்ரேக்கர், ஸ்டார் வார்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்கள் வானியல் குறித்து வெளிவந்து உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுள்ளது. ஆனால் தமிழில் இதுவரை இதுமாதிரியான திரைப்படங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் விரைவில் வானியல் சம்பந்தப்பட்ட படம் ஒன்று தமிழில் தயாரிக்கப்படவுள்ளது.

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி செளந்திரராஜன் ‘ஸ்டார் வார்ஸ்’ பாணியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்திலும் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதன்பின்னர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை சக்தி செளந்திரராஜன் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply