டெல்லியில் தெற்கு ஆசியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்.

டெல்லியில் தெற்கு ஆசியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்.


பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போல் தெற்காசியாவிலேயே முதல்முறையாக ஹெலிகாப்டர்களுக்கு என நிலையம் ஒன்று தலைநகர் டெல்லியில் இன்று திறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் நிலையத்தை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இந்த ஹெலிகாப்டர் நிலையத்தில், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் இங்கு உண்டு.

நாட்டின் முதல் ஒருங்கிணைந்த இந்த ஹெலிகாப்டர் நிலையம், நாள்தோறும் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டர்களுக்கான ஒருங்கிணைந்த நிலையம் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது என விழாவில் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பேசியது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.