தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா

மது கடைகள் திறக்கப் படுமா?

தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் கொரோனா பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திட்டமிட்டபடி மது கடைகள் திறக்கப் படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது

தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் முதலான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரும் அவருடன் சென்ற மூன்று பேர்களும் மற்றும் உறவினர்கள் 8 பேர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி இருந்த நிலையில் அங்கு வரும் 4ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் கொரோனா பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply