இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல படங்களுக்கு இசையமைத்து பாடியும் உள்ளார். ஒரு சில ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். அவருடைய ஒருசில ஆல்பத்தில் அவர் நடித்தும் உள்ளார். ஆனால் இதுவரை அவர் எந்தவொரு நடிகையுடனும் ஆல்பத்திலோ அல்லது படத்திலோ நடித்ததில்லை. முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான், ஹைவே என்ற படத்தின் புரமோ பாடலுக்காக நடிகை அலியா பட் உடன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்காக ஒரு புரமோ பாடலை இயக்க ஹைவே படத்தின் இயக்குனர் இம்தியாஜ் அலி முடிவு செய்து அதை ரஹ்மானிடமும், அலியா பட் உடனும் கலந்து ஆலோசித்தபோது அலியா பட் உடனே ஒப்புக்கொண்டார். ஆனால் நடிகையுடன் இதுவரை நடித்திராத ஏ.ஆர்.ரஹ்மான் சிறிது தயக்கம் காட்டினார். அதன்பின்னர் படக்குழுவினர் கொடுத்த தைரியத்தில் அலியா பட் உடன் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடித்த முதல் நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார் அலியா பட்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1jre7qy” standard=”//www.youtube.com/v/30zJZPb-o3Q?fs=1″ vars=”ytid=30zJZPb-o3Q&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6754″ /]

Leave a Reply