இறந்தவர் தடுப்பூசி போட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்.: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஆறு மாதங்களுக்கு முன் இறந்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவர் பயன்படுத்திய மொபைலுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு கூலித்தொழிலாளி நாராயணன் என்பவர் இறந்துவிட்டார்.

அவர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்திய மொபைலுக்கு எஸ்எம்எஸ் செய்தி வந்துள்ளது

இது அவரது குடும்பத்தினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போளூர் மருத்துவமனையில் உறவினர்கள் விசாரித்து வருகின்றனர்.