shadow

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைவர்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்றும் ஏனெனில் அதில் பொருத்தப்பட்டுள்ள சாப்ட்வேர் பல்வேறு தணிக்கைகளுக்குப் பிறகே அதில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவுதமா கூறியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்துதான் பல கட்சிகள் வெற்றி பெற்றுவருவதாக புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவுதமா நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

மேலும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் சிறப்பை அறிந்து வெளிநாடுகளும் அவற்றை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளதாகவும், நமீபியா நாட்டுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேபாளத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பயன்படுத்த இந்த எந்திரங்களை கேட்டதாகவும், ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் தங்களால் தயாரித்து வழங்க முடியவில்லை என்றும் கூறிய கவுதமா இலங்கையும் இந்த எந்திரங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்

Leave a Reply