ஒரே நாளில் 18ஆயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு!!

நாடு முழுவதும் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 14,500 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 18,819 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 164 ஆக பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்