அதிரடி அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி

விமானத்தில் பயணம் செய்பவர்கள் சக பயணியை தொட்டால் 14 நாட்கள் தனிமைச் சிறை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சமீபத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும்போது கொரோனா அறிகுறி இருந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் விமானத்தில் வருபவரை அழைத்துச் செல்ல ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்றும், சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
இதுமட்டுமின்றி விமானத்தில் பயணம் செய்த போது சக பயணியை தொட்டால் இருவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply